காஞ்சிபுரம் : இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக்கோரியும், போர் நிறுத்தம் செய்யக்கோரியும், செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 7 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று விலக்கிக் கொண்டனர். மாணவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.