சென்னை : இலங்கையில் தமிழர்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுகின்ற வேதனையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அதை தெரியப்படுத்துகின்ற வகையில் பல்லாயிரக்கணக்கானோர் கையில் கறுப்பு கொடி ஏந்தி, அமைதியாக எங்களுடைய மவுன விரதத்தை நடத்துகிறோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.