சென்னை: இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்பட்ட நிதி பற்றி முதலமைச்சர் கருணாநிதி மீது அவதூறு பரப்பிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு தாக்கீடு அனுப்பியுள்ளது. மேலும் 3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.