ஆர்.வெங்கட்ராமன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை இரங்கல்
முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தமிழக சட்டப் பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவை இன்று காலையில் கூடியதும் அவைத் தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை படித்தார்.
அதில், சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்நாட்டு அரசியலிலும், இந்திய தேசிய அரசியலிலும் தனியொரு வரலாறு படைத்தவரும், இந்தியத் திருநாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவருமான ராமசாமிவெங்கட்ராமன் தனது 99-வது அகவையில் 27.1.09 அன்று புதுடெல்லியில் மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1942ம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு'' இயக்கத்தில் கலந்து கொண்டு 2 ஆண்டுகள் சிறை சென்றார்.
1952-57 ஆம் ஆண்டுகளில், முதல் இந்திய பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னர் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக அரசில் 1957-67 ஆண்டுகளில் தொழில், கூட்டுறவு, போக்குவரத்து மற்றும் வணிகத்துறைகளில் அமைச்சராக திறம்பட பணியாற்றினார். அவ்வமயம், அவர் தமிழக மேலவை முன்னவராகவும் பணியாற்றினார்.
1977ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினராகப் பணியாற்றினார். 1980ஆம் ஆண்டு மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக சிறப்புறப்பணியாற்றினார். பின்னர் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். 1984ஆம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை குடியரசுத் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 1987ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகச் சிறப்புறப் பணியாற்றினார்.
அவரது மறைவால், அவரை இழந்து வருந்தும் அவர் தம் குடும்பத்தினருக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. இந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றும் முகத்தானும் மறைந்த இம்மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மணித்துளிகள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஆவுடையப்பன் கூறினார்.
இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து மவுன அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் வெங்கட்ராமனுக்கும், மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தை தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
நாளை (29ஆம் தேதி) சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.