சென்னை : இலங்கையில் அப்பாவித் தமிழர்களை அந்நாட்டு இராணுவத்தினர் படுகொலை செய்வதைக் கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் சென்னை தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.