சென்னை : சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கும், காங்கிரசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், ராணுவம் பற்றி பேசிய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.