சென்னை: ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரத்தைப் போக்க அனைத்து மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டவும், பிப்ரவரி 12ஆம் தேதி அன்று டெல்லியில் நாடாளுமன்றம் அருகே ம.தி.மு.க. சார்பில் என்னுடைய தலைமையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.