சென்னை : தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் தான் பொறுப்பாளி ஆவார்கள் என்று தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசையும், அதற்குத் துணைபோகும் மாநில அரசையும் கண்டித்து வரும் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.