சென்னை : ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு சிலர் செயல்படுவது குறித்தும்தான் முதலமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர, பா.ம.க. தலைவர் ராமதாஸ் பற்றியோ, விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் பற்றியோ கண்டனம் தெரிவித்ததாக மாலை ஏடுகள் சிலவற்றில் வெளியிட்டிருப்பது தவறானதாகும் என்று தி.மு.க. தலைமைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.