சென்னை : இனநலனை முன்னிறுத்தி நாங்கள் மேற்கொண்ட முடிவு, முதலமைச்சருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தால் வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், உண்ணாவிரதத்தை, நானும் முதலமைச்சர் கருணாநிதியும் இணைந்து நடத்திய நாடகம் என்றும் போரில் தமிழர்கள் கொல்லப்படுவது இயல்புதான் என்று கூறும் ஜெயலலிதா எத்தகைய நஞ்சு தோய்ந்த நெஞ்சைக் கொண்டவர் என்பதை தமிழ் சமுதாயம் உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.