சென்னை: முதலமைச்சர் கருணாநிதி சொல்லுகிறபடி, ஈழத் தமிழர் பிரச்சனைக்காக மீண்டும் ஒரு முறை ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடந்தால், அதை அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அத்தகைய முயற்சிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் துணை போகாது என்றும் ஈழத் தமிழர்களின் நலனைக் காக்க முற்படும் அரசை கவிழ்க்க தமிழக மக்களும் துணைபோக மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.