சென்னை: பிணக்குவியலுக்கு இடையில் ஒப்பாரியும் ஓலமுமாய் ஈழத்தமிழீழம் அழிந்து கொண்டு வரும் நிலையில், தமிழக தமிழினம் பொங்கல் விழா கொண்டாட்டங்களில் பூரிக்கும் நிலை ஈழத்தமிழினத்தின் நெஞ்சை சுடும் நெருப்பாகவே அமையும் என்று கூறியுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய அரசுகளுக்கு தமிழினத்தின் ஒற்றுமையை காட்டும் வகையில் ஒட்டுமொத்த தமிழினமும் பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்த்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.