தமிழக முதலமைச்சர் அவர்கள் 12.1.2008 அன்று புத்துணர்வோடு கொண்டாடுவோம் பொங்கல் விழாவை! என்று தெரிவித்து, கிராமப்புறங்களிலும், நகரங்களிலும், வீடுகள்தோறும், அரசுக் கட்டடங்கள் அனைத்திலும் பொங்கல் நாளன்று வண்ண வண்ணமாய் சரவிளக்குகள் அமைத்து எழில் குலுங்கிடச் செய்திடுவீர் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி அரசு கட்டடங்கள் மற்றும் தனியார் வீடுகள், வணிக வளாகங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.