சென்னை: பொங்கல் நன்னாளில் அராஜகம், வன்முறை, சுயநலம் ஆகியவை அகன்று, ஜனநாயகம் தழைத்தோங்க நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும் என்ற என்னுடைய அவா வினைத்தெரிவித்து, அனைவரது வாழ்விலும் ஆனந்தம் பெருகட்டும்! அமைதி தவழட்டும்! செல்வம் செழிக்கட்டும்! என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.