சென்னை : டேங்கர் லாரிகளும், ஆயில் நிறுவன அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் 2 நாட்களில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் மூடப்படும் அபாயம் ஏற்படும்.