சென்னை : சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசை வற்புறுத்தி பா.ஜ.க. சார்பில் சென்னையில் வரும் 12ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.