இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்யக் கூடாது என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு பொருட்படுத்தாததை கண்டித்து சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.