லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது: கிராம மக்கள் மறியல்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புதுறையினர் கைது செய்தபோது அவர் நேர்மையானவர், அவரை கைது செய்யகூடாது என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு அருகே உள்ளது தாராபுரம். இங்குள்ள கோவிந்தாபுரத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் திருமலைசாமி. காளிபாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி தன் தோட்டத்திற்கு மின் இணைப்பு பெற கிராம நிர்வாக அதிகாரி திருமலைசாமியிடம் கையெழுத்து வாங்க வந்தார்.
இதற்கு திருமலைசாமி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெய்வசிகாமணி லஞ்சஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். உடனே அவரிடம் ரசாயணம் கலந்து ரூபாய் நோட்டு கொடுத்து அதை வாங்கும்போது திருமலைசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த தகவல் தெரிந்ததும் அக்கிராம மக்கள் லஞ்சஒழிப்பு காவல்துறையினரை முற்றுகையிட்டனர். எங்கள் கிராம அதிகாரி நேர்மையானவர் என்றும் அவரை திட்டமிட்டு சிக்கவைத்துள்ளனர் என்றும் ஆகவே அவரை கைது செய்யகூடாது என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் தெரிந்ததும் தாராபுரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்தார். பின் சாலை மறியல் செய்த கிராம மக்களை அப்புறப்படுத்தி பின் திருமலைசாமியை கைது செய்து அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.