சென்னை: தவிர்க்க முடியாத காரணத்தால் திருமங்கலம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு என்னால் செல்ல இயலவில்லை என்று தெரிவித்துள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு முழு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.