சென்னை : சாய சலவை, தோல் பதனிடும் ஆலைகள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஒரு சொட்டுக் கூட ஆற்றில் கலக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்தாததை கண்டித்து சேலத்தில் பா.ஜ.க சார்பில் வரும் 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.