சென்னை: கடைசித் தமிழன் என்கிற கடைசிப் புலி உள்ளவரையில் இலங்கையில் விடுதலைப்போர் தொடரும் என்பதில் அய்யமில்லை என்று தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இனப்பகையும் துரோகமும் வீழ்த்தப்பட்டு ஈழம் வென்றெடுக்கப்படும் என்கிற நம்பிக்கை இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது என்றும் கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது என்பதை சிங்கள அரசை தாங்கிப்பிடிக்கும் இந்திய அரசுக்கு காலம் விரைவில் உணர்த்தும் என்று கூறியுள்ளார்.