சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி இன்று சென்னையில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், இலவச வேஷ்டி-சேலை வழங்கும் திட்டத்தையும் அவர் துவக்கினார்.