2007-2008 ஆம் ஆண்டிற்கு சி' மற்றும் டி' பிரிவு அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ.2500 உச்சவரம்புக்குட்பட்டு போனஸ் வழங்கிடவும், ஏ' மற்றம் பி' பிரிவு அலுவலர்களுக்கு ரூ.1000 சிறப்பு போனஸ் வழங்கிடவும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.300 வழங்கிடவும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.253 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.