சென்னை : இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு காப்பாற்ற தவறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என். வரதராஜன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்துள்ள முதல்வர் கருணாநிதி, தி.மு.க. அரசு இலவச வீட்டுமனைப் பட்டா மட்டும் அல்ல தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை அளித்ததோ அவை அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.