1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

அ.இ.அ.தி.மு.க போட்டி நா‌ங்க‌ள் எடு‌த்த முடிவுதா‌ன்: வைகோ

அஇஅதிமுக திருமங்கலம் இடைத்தேர்தல் வைகோ
''திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.இ.அ.ி.ு.க போட்டியிட வேண்டும் என்பது ம.ி.ு.க நிர்வாகிகளால் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவே'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

webdunia photoFILE
அரியலூரில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், பாராளுமன்ற தேர்தல் 4 மாதத்தில் நடக்க இருக்கிறது. அதனால், திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.இ.அ.ி.ு.க.வை போட்டியிட செய்யலாம் என்று கூட்டணி கட்சியான ம.ி.ு.க, ஆலோசித்து முடிவு செய்தது. அதை விமர்சனம் செய்வது கேலிக்குரியது எ‌ன்றா‌ர்.

''மானம், மரியாதையை இழக்க முடியாது என்ற காரணத்தால் பா.ம.க.வை வெளியேற்றினோம்'' என்று செய்தியாளர்களிடம் தமிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூறினார் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த வைகோ, ஆனால் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'நாங்கள் எப்போது பா.ம.க.வை வெளியேற்றினோம்?'' என்று கேட்கிறார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தியது. ஆனால், போர் நிறுத்தத்துக்காக இலங்கை அரசை இந்திய அரசு இதுவரை வலியுறுத்தவில்லை எ‌ன்று வைகோ கூ‌றினா‌ர்.
About Writer
Webdunia