சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதம் அடைந்த சாலைகளை செப்பனிடக் கோரியும், மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை சரி செய்யக் கோரியும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை தூத்துக்குடி நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.