சென்னை : தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் நிவாரண உதவிகள் நிச்சயமாகக் கிடைக்கும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, எவ்வளவு விரைவில் நிவாரண உதவிகளை வழங்குகின்ற பணியை நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு நிறைவு செய்திட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.