சென்னை: தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என்று விமர்சனம் செய்த இலங்கை போர்ப்படை தளபதி பொன்சேகா இன்னும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தவறினால், இங்குள்ள இலங்கைத் தூதரையும், இதர அதிகாரிகளையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றுவோம் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சிங்களப் படைத் தலைவரின் இந்த காட்டுமிராண்டித்தன விமர்சனத்தை முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுத்தியுள்ளார்.