1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

வெள்ள நிவாரண‌ப் ப‌ணியை துரித‌ப்படுத்த ஸ்டாலின் தலைமையில் குழு

வெள்ள நிவாரணப் பணி ஸ்டாலின் அமைச்சரவை துணைக்குழு தமிழக அரசு
வெள்ள நிவாரணப் பணிகளை கண்காணித்து துரிதப்படுத்த உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை துணைக்குழு ஒன்றினை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்த குழுவில் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்‌னீர்செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் இடம் பெறுகிறார்கள்.

பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்படும் வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும், இக்குழு நடவடிக்கை எடுக்கும் எ‌ன்று‌ம் இக்குழுவின் முதல் கூட்டம் நாளை (2ஆ‌ம் தே‌தி) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் எ‌ன்று‌ம் த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூறப்பட்டுள்ளது.
About Writer
Webdunia