1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

சென்னை ரயில்கள் தாமதம்; போக்குவரத்து பாதிப்பு!

சென்னை போக்குவரத்து பாதிப்பு ஏரி மழை ரயில் போக்குவரத்து
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை நீர் தேங்கி ஏரி போல் காட்சியளிப்பதால், புறநகர் ரயில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

புறநகர் ரயில்களின் போக்குவரத்து சேவை சற்றே குறைக்கப்பட்டுள்ளதாகவும், ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் இருப்பதால் மெதுவாக இயக்கப்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதேபோல் வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்வதாகவும் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் போக்குவரத்து பேருந்துகள் வெள்ள நீர் சூழ்ந்திராத பகுதிகளுக்கு மட்டுமே இயக்கப்படுகின்றன.

பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
About Writer
Webdunia