சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பலத்த தொடர்ந்து பெய்து வரும் கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகள் நீரில் மிதக்கின்றன. சென்னையில் தாழ்வான பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. 'நிஷா' புயலில் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது.