சென்னை: முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று தமிழ்நாடு மின்சார வாரியம், மத்திய அரசு நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 800 மெகாவாட் திறனுள்ள 2 யூனிட்களை கொண்ட அனல்மின் திட்டம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.