சென்னை : இலங்கை வாழ் தமிழ் மக்களை காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்ட கருத்துடன், ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சனையை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவா? எதிர்ப்பா? என்ற சர்ச்சையாக மாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.