இலங்கையிலே தமிழர்களைக் கொன்று குவிப்பது ‘இந்து’வின் பார்வையில் இனவெறியாகத் தெரியவில்லை. அந்த ராணுவ நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் இலங்கை ராணுவம் வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும் பூரித்து கட்டுரை எழுதுகிறது. இதை எதிர்த்து தாய்த் தமிழகத்தில் உருவாகும் எழுச்சியை மட்டும் ‘இனவெறி’ என்கிறது.