சென்னை : ஏற்கனவே நிலவும் மின்வெட்டின் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்ட மின் விநியோக கட்டுப்பாட்டுமுறையால் அனைத்து தொழில்களும் முடங்கும் அபாயம் இருப்பதால் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.