சென்னை: தொலைத்தொடர்புத் துறையில் அலைவரிசைத் தொகுப்பு (ஸ்பெக்ட்ரம்) பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் ராசாவை உடனடியாக பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.