சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி அ.இ.அ.தி.மு.க. சார்பில் கத்திவாக்கம் நகராட்சித் திடலில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.