சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகளை மேலும் வலுப்படுத்தி, மேம்படுத்திட தமிழ்நாடு அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி முன்னிலையில் கையெழுத்தானது.