சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் தூங்கக்கூடாது என்று நல்லகண்ணு பேசியிருப்பதை பற்றி கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையிலும் தமிழக அரசு இதுவரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது'' என்று பதில் அளித்துள்ளார்.