சென்னை: சிறிலங்க அரசுக்கு மத்திய அரசு ஆயுத உதவி வழங்க கூடாது என வலியுறுத்தியும், ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.