சென்னை: தங்களின் அலைவரிசைகள் திருடப்பட்டு வினியோகம் செய்யப்படுவதாக சன் நெட்வொர்க் நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கில், ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மதுரை ராயல் கேபிள் விஷன் (ஆர்.சி.வி.) நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.