சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.