சென்னை: வன்னியர் சங்கத் தலைவரும் பா.ம.க. பிரமுகருமான காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க.- பா.ம.க. உறுப்பினர்கள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.