சென்னை: ''அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், ராஜா ஆகியோர் மீது ஆதாரபூர்வமாக கடுமையான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இருவரும் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் கருணாநிதி நீக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.