சென்னை: ''கச்சத்தீவில் நமக்குள்ள உரிமைகளை பெற்றுத் தரத்தவறினால் கச்சத்தீவே மீண்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகும். இந்த பிரச்சனையில் கட்சி வேறுபாடுகளையும், அரசியல் மாறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.