சென்னை: சிறிலங்க கடற்படையினர் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பலியாகி வருவதைக் கண்டித்து எல்லா கடலோர நகரங்களிலும் தி.மு.க. சார்பில் வருகிற 19 ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.