சென்னை: வரி உயர்வு உள்ளிட்ட நகர மன்றத் தீர்மானங்கள் மீது நகரமன்றத்தில் விவாதம் நடத்தாமலேயே தீர்மானங்களை நிறைவேற்றியதாக ராமநாதபுரம் நகர மன்றத் தலைவரைக் கண்டித்து வரும் 18ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.