சென்னை: அணு சக்தி ஒப்பந்தத்தில் நிலவும் கருத்து வேறுபாட்டை நீக்கி தீர்வு ஏற்படுத்த, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மூத்த தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி தலையிட வேண்டும் என இடதுசாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.