மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : கருணாநிதி!
ஏரிகளில் மூழ்கி இறந்த மூன்று மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கச்சூர் கிராமத்தைச் சேர்ந்த டில்லிபாபு (14), லோகேஷ் (14), கோபிநாத் (13) ஆகிய மாணவர்கள் ஏரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்தனர்.
அவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் விடுத்த கோரிக்கையை ஏற்று மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.