போலி கடவுச்சீட்டு: இலங்கை தம்பதியினர் கைது!
போலியாக தயாரிக்கப்பட்ட இந்திய கடவுச் சீட்டு மூலம் இலங்கை செல்ல முயன்ற இலங்கை தம்பதியினர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முத்துலிங்கம் (58), மாதேஸ்வரி என்ற இலங்கையைச் சேர்ந்த தம்பதியினரிடம் சோதனை மேற்கொண்ட போது அவர்கள் போலி யாக தயாரிக்கப்பட்ட இந்திய கடவுச்சீட்டு மூலம் இலங்கை செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர்கள் 1984ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தது தெரியவந்தது. அப்போது முறைகேடாக இந்திய கடவுச்சீட்டு பெற்றதும் தெரியவந்தது. பின்னர், அவர்களை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.